அப்படி பார்க்காதே..
சற்று முன்
அண்டார்டிகாவில் இருந்து
எடுத்த பனிக்கட்டியை
சகாராவில் வைத்தது
போல் உருகிவிடுகிறேன்
====
இந்த உலகத்திற்கே
தெரியாத
உலக அழகி
நீ..
====
பக்கத்து வீட்டு
குட்டி பெண்ணை
பார்த்து
கண்ணடித்த நம்
மகனை அடித்தாய்..
“அப்பா மாதிரி இந்த வயசுலேயே
எல்லா வேலையும் பண்ணுது”
என திட்டிக்கொண்டே..
====
உன்னோடு நடக்கையில்
எதிரே வந்த பெண்ணை
பார்க்க..
நீ என்னை கிள்ள..
“ஒன்னும் இல்ல அந்த
பொண்ணு உன்ன மாதிரியே
இருந்துச்சு”
என நான் சமாதானப்படுத்த..
“அரசியல்ல இதெல்லாம்
சகஜமப்பா” என என்
அலைபேசியின்
ரிங்டோன் ஒலித்தது…
====
“போடா” எனும் வார்த்தையை
எத்தனை விதமாய்
கூறலாம் என
உன்னிடத்தில் தான்
அறிந்துகொண்டேன்..
====
Love you
என்று நீ
உச்சரிக்கும் நிமிடங்களில்
உன் மேற்பற்களின்
கடிபடும் கீழுதடாக
மாறிவிட துடிக்கின்றேன்.
====
என்னை பரிசோதித்த
டாக்டர் சொன்னார்
“stethoscope-இல் ஒரே
இரைச்சல் சத்தம்” என்று.
அவருக்கு தெரியாது
அது என் இதயம் அழும்
ஓசை என்று..
Sunday, July 26, 2009
Saturday, July 18, 2009
ஏழு முதல் பத்து வரை..
என் வாழ்வின் வசந்த காலம் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை. காலச்சக்கரம் மட்டும் என் கையில் இருந்தால் எப்படி இருக்கும்? ஒரு முறை என் வளரிளம் பருவ நிகழ்வுகளை சென்று பார்வையிட நீண்ட நாள் ஆசை. ஒருவேளை நான் பார்வையிட சென்றால்?
ஏழு..
டேய் சிவா “சக்திமான்” போட்டிருப்பான்டா. சீக்கிரம் வா”. அதில் வரும் Jackal-இன் வில்லத்தனங்களையும் கங்காதரின் காமடியையும் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். கடைசியாக வரும் “சின்ன விஷயம் பட் பெரிய கருத்துக்கள்” பார்த்து அதில் வருவது மாதிரியே “Sorry Shakthimaan” சொல்லி கிண்டல் அடித்துக்கொண்டிருக்கிறேன். தெருவில் எங்கே விளையாடிக்கொண்டிருந்தாலும் வெள்ளி இரவு எட்டு மணிக்கு ஒளியும் ஒலியும் பார்க்க ஓடி வருகிறேன்.ஒவ்வொரு முறை Progress Report கொடுக்கும் போதும் எனக்கு ஜுரம் வருகிறது.
எட்டு….
அப்பாவிடம் அடம்பிடித்து Video Games வாங்கி நானும் அருணும் “contra”,”mario”,”duck hunt” ஆகியவற்றை விளையாடிக்கொண்டிருக்கிறோம். இரண்டாவது Joystick-ஐயும் உடைத்து தள்ளி விட்டேன். “டேய் ஆளுக்கு ரெண்டு ரூபா கொண்டு வந்திருங்க. சாயங்காலம் பெட் மேட்ச் இருக்கு” என்று நண்பர்களுக்கு கூறிக்கொண்டிருக்கிறேன்.ஜெயித்த காசில் ஆளுக்கு ஒரு ரஸ்னா பாக்கெட் வாங்கி குடிக்கிறோம்.
ஒன்பது..
Microxerox என்றால் என்ன என்று நண்பர்கள் சொல்லி கொடுத்தனர். அவர்கள் முன்னிலையில் Bit எடுத்து செல்வது மாதிரி நடித்து(இல்லேன்னா சின்ன பையன்னு சொல்லிடுவானுங்க) அதை பரீட்சை எழுதும் போது கடைசி வரை எடுக்காமலேயே வெளியே வந்து “நானும் ரவுடி தான்” ரேஞ்சுக்கு சீன் போடுகிறேன். அப்போது release ஆன காதலர் தினம் படத்தை பார்த்து குணால் மாதிரியே தலையை வாரிக்கொண்டு இருக்கிறேன். மிக மோசமாக இருப்பதை கூட உணரமுடியாமல் Style என நினைத்துக்கொண்டு ஊரை சுற்றி சுற்றி வருகிறேன். Tortoise சுருளை கால்வாசி உடைத்து ஒரு முனையை பற்றவைத்து மறுமுனையில் நாட்டு வெடி சரத்தின் திரியை கட்டி நானும் என் நண்பனும் பள்ளி டாய்லெட்டில் வைத்து விட்டு வருகிறோம். எல்லோரும் அசெம்ப்ளியில் “ஜன கன மன” பாட வெடி படார் படார் என்று வெடிக்கும் சத்தம் கேட்கிறது. உடனே PT சார் எங்கள் கோஷ்டியை கோழி அமுக்குவது போல் அமுக்கி எங்கள் இருவரை மட்டும் அடி பின்னி எடுத்துவிட்டார். கடைசியில் தான் தெரிந்தது கையில் ஒட்டி இருந்த வெடி மருந்தை கழுவாமலேயே அசெம்ப்லி வந்துவிட்டோமென்று.
பத்து..
Tuition-இல் அது வரை காய்ந்து கிடந்த எங்களுக்கு தேவதையாக ஒரு பெண் சேர்ந்தாள். . நான் என்னுடைய நோட்டில் அவள் பெயரை code word-ஆக எழுதி வைத்திருக்கிறேன். அந்த பொண்ணால எங்க கோஷ்டியில் நிறைய சண்டை நடக்கிறது. அவள் என்னைத்தான் பார்க்கிறாள் என்று ஒருவன் சொல்ல அவனை மொத்த கூட்டமும் சேர்ந்து கும்மி எடுக்கிறது. அவள் ஜாஸ்மின் flavor-இல் சென்ட் போட்டு வர நாங்கள் எல்லோரும் அதே சென்ட் போட்டு tuition சென்டரை நாரடித்தோம். அவளுடைய அப்பா ஒரு ஜெராக்ஸ் கடை வைத்து இருந்தார். Tuition முடிந்தால் மொத்த கூட்டமும் அங்கே சென்று நேற்று எடுத்த அதே ஜெராக்சை திரும்ப திரும்ப எடுக்கிறோம். கடைக்கு பின்னே அவர்கள் வீடு என்பதால் எட்டி பார்த்துக்கொண்டே இருப்போம். மிக நெருங்கிய நண்பன் அவளிடம் போய் propose செய்து bulb வாங்கிக்கொண்டு வர நான் அவனுக்கு மிக மிக சந்தோஷமாக ஆறுதல் கூறிக்கொண்டு இருக்கிறேன்.

திகட்ட திகட்ட காதல்...
நீ என்னை திட்டுவதை
மிகவும் ரசிக்கிறேன்.
உன் இதழ்கள் இன்னும்
அழகாக நாட்டியமாடுகின்றன.
இவ்வுலகின் ஆகச்சிறந்த
நவரசநாட்டியக்காரி உன் இதழ்கள்.
====
உன்னைப்பற்றி எழுதும்
எழுத்துக்களில் உன்
அணைப்பின் கதகதப்பு
தானாக வந்தமர்கிறது..
====
தினம் ஒருமுறையாவது
பிறந்த குழந்தையின்
மென்மையை உணர ஆசை..
பேசாமல் உன் கூந்தலை
கோதும் விரல்களாய் என்னை
மாற்றிவிடேன்..
====
என் இதயம்
என்றாவது ஒரு நாள்
திகட்டி திகட்டியே இறக்கும்..
என் ரத்த அணுக்களில் நீ
கலந்திருப்பதால்..
====
நான் எழுதிய
கவிதைகளை
நான் சொல்லாமலே
நீ கண்டுபிடித்தாய்..
நமக்கு தானே தெரியும்
ஒவ்வொரு கவிதையிலும்
நாம் ஒளிந்து விளையாடுவது..
====
ஆசிர்வதிக்கப்பட்டவை -
உன் ஸ்பரிசத்தை
உணர்பவை எல்லாம்.
====
இன்பத்துப்பாலின்
விடுபட்ட அதிகாரங்கள் -
நாம் இருவர்.
மிகவும் ரசிக்கிறேன்.
உன் இதழ்கள் இன்னும்
அழகாக நாட்டியமாடுகின்றன.
இவ்வுலகின் ஆகச்சிறந்த
நவரசநாட்டியக்காரி உன் இதழ்கள்.
====
உன்னைப்பற்றி எழுதும்
எழுத்துக்களில் உன்
அணைப்பின் கதகதப்பு
தானாக வந்தமர்கிறது..
====
தினம் ஒருமுறையாவது
பிறந்த குழந்தையின்
மென்மையை உணர ஆசை..
பேசாமல் உன் கூந்தலை
கோதும் விரல்களாய் என்னை
மாற்றிவிடேன்..
====
என் இதயம்
என்றாவது ஒரு நாள்
திகட்டி திகட்டியே இறக்கும்..
என் ரத்த அணுக்களில் நீ
கலந்திருப்பதால்..
====
நான் எழுதிய
கவிதைகளை
நான் சொல்லாமலே
நீ கண்டுபிடித்தாய்..
நமக்கு தானே தெரியும்
ஒவ்வொரு கவிதையிலும்
நாம் ஒளிந்து விளையாடுவது..
====
ஆசிர்வதிக்கப்பட்டவை -
உன் ஸ்பரிசத்தை
உணர்பவை எல்லாம்.
====
இன்பத்துப்பாலின்
விடுபட்ட அதிகாரங்கள் -
நாம் இருவர்.
Saturday, July 11, 2009
டாவின்சி தோற்றுப்போனான் என்னிடம்..
உன் மேல் விழும்
என் நிழலில்
தெரிகிறதா
என் காதலின் அடர்த்தி?
=====
தேவதைகளால்
ஆசிர்வதிக்கப்பட்டவள் நீ..
அத்தேவதைகளால்
வரம் கொடுக்கப்பட்டவன் நான்..
=====
நீ சாப்பிட்டு
கொண்டிருந்த
ஐஸ்க்ரீமை
நான் பிடுங்க
நீ செல்லமாக சிணுங்க
நம் காதல் கனலில்
உருகி வழிந்தோடிற்று
ஐஸ்க்ரீம்..
=====
காதலை தவிர
உளறுவதற்கு
எதுவுமில்லை என்னிடம்..
=====
வெகுநாள்
புத்தகத்தின் இடையே
வைக்கப்பட்ட
இலையின் நரம்புகளை
வருடும்போதெல்லாம்
ஒருமுறை உன் கூந்தல்
என் முகத்தினை தழுவி செல்கிறது..
=====
என்னை தேடும்போது
உன் விழிகள்
காற்றில் போடுகின்றன
எண்ணற்ற
கோலங்களை..
=====
தினம் தினம்
ஒரு பொட்டு வைக்கிறாய்
ஒரு நாள் பாம்பு பொட்டு
மறுநாள் பிறைநிலா பொட்டு
மற்றொரு நாள் பூ பொட்டு
மாலை நீ அவற்றை
எடுத்துவைக்க
அதை நான்
தனியே சேகரித்து
உன் முகத்தினைபோல்
வெள்ளை காகிதத்தில்
ஒட்டிவைக்கிறேன்.
உன் அழகின் மிச்சமும்
அவற்றில் ஒட்டி இருப்பதால்
டாவின்சி தோற்றுப்போனான்
என்னிடம்..
என் நிழலில்
தெரிகிறதா
என் காதலின் அடர்த்தி?
=====
தேவதைகளால்
ஆசிர்வதிக்கப்பட்டவள் நீ..
அத்தேவதைகளால்
வரம் கொடுக்கப்பட்டவன் நான்..
=====
நீ சாப்பிட்டு
கொண்டிருந்த
ஐஸ்க்ரீமை
நான் பிடுங்க
நீ செல்லமாக சிணுங்க
நம் காதல் கனலில்
உருகி வழிந்தோடிற்று
ஐஸ்க்ரீம்..
=====
காதலை தவிர
உளறுவதற்கு
எதுவுமில்லை என்னிடம்..
=====
வெகுநாள்
புத்தகத்தின் இடையே
வைக்கப்பட்ட
இலையின் நரம்புகளை
வருடும்போதெல்லாம்
ஒருமுறை உன் கூந்தல்
என் முகத்தினை தழுவி செல்கிறது..
=====
என்னை தேடும்போது
உன் விழிகள்
காற்றில் போடுகின்றன
எண்ணற்ற
கோலங்களை..
=====
தினம் தினம்
ஒரு பொட்டு வைக்கிறாய்
ஒரு நாள் பாம்பு பொட்டு
மறுநாள் பிறைநிலா பொட்டு
மற்றொரு நாள் பூ பொட்டு
மாலை நீ அவற்றை
எடுத்துவைக்க
அதை நான்
தனியே சேகரித்து
உன் முகத்தினைபோல்
வெள்ளை காகிதத்தில்
ஒட்டிவைக்கிறேன்.
உன் அழகின் மிச்சமும்
அவற்றில் ஒட்டி இருப்பதால்
டாவின்சி தோற்றுப்போனான்
என்னிடம்..
Subscribe to:
Posts (Atom)